Monday, August 18, 2014

பாகப்பிரிவினைக்கு முன்

அல்லாஹ்வின் திருபெயரால் ......
இஸ்லாமிய வாரிசுரிமை சட்டம் தொடர்ச்சி............


பாகப்பிரிவினைக்கு முன் ..

பாகப்பிரிவினையின் போது முக்கியமாக கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் இருக்கின்றன. அதாவது இறந்தவர் கடன்பட்டிருக்கிறாரா, யாருக்கு வசியத் [மரணம் சாசனம்] செய்திருக்கிறாரா, அல்லது மனைவிக்கு மஹர் தொகை கொடுக்காமல் இருந்து விட்டாரா என்பதைஎல்லாமரிந்து அவைகளுக்கு கொடுத்தது போக மீதமுள்ள சொத்தைத்தான் பாகம் பிரிக்க வேண்டும்.


மேல் கூறப்பட்ட சட்டங்களே இஸ்லாமிய வாரிசுரிமைக்கு மூலமாக திகழக்கூடிய சட்டங்களாகும், இவற்றில் வாரிசுதாரர்கள் கூடுதல் குறைதல், இறப்பில் யார் முன் யார் பின் இறந்திருக்கிறார்கள் என்ற விபரம், நேரடியான வாரிசுகள் இல்லாத போது வேறு யார் வாரிசாக வருவார்கள் , பாட்டன் , பாட்டி, பேரன் , பேத்தி,  சகோதரன், சகோதரி ஆகியோர்கள் எப்போது வாரிசாக வருவார்கள் என்பன போன்ற பல உட்பிரிவுகளும் மேலும் பல நுட்பமான விஷயங்களும் வாரிசுரிமை சட்டத்தில் நிறைய இருக்கின்றன.

எனவே, பாகஸ்த்தர்கள் பாகம் பிரிக்கின்றபோது, வாரிசுதாரர்கள் யார் யார் என்பதை தெளிவாக எழுதி வேலூர் , நீடுர் , லால்பேட்டை போன்ற அரபிக்கலுரிகளுக்கு  எழுதி கேட்டால் அவர்கள் ஷரீ அத் சட்டப்படி யார் யாருக்கு எந்தெந்த விகிதாச்சாரத்தில் சொத்துக்களை பிரித்து தரவேண்டும் என்ற விபரத்தை மார்க்கத்தீர்ப்பெனும்  ... பத்வாவாக கொடுத்து விடுவார்கள் அதன்படி சொத்துக்களை பிரித்துக்கொள்ள வேண்டும்.


வாரிசுதார்களும் -பாகங்களும்

ஒருவர் காலமாகிவிட்டால் , அவருடைய சடங்குகள் முடிந்த பிறகு, அடுத்தக்கட்டமாக தலை தூக்குவது சொத்துப்பிரச்ச்னை தான், அவருக்கு எங்கெங்கே என்னென்ன சொத்துக்கள் இருக்கின்றன. கையிருப்பிலும் பேங்குகளிலும் எவ்வளவு ரொக்கம் இருக்கிறது , பொருளாக என்னென்ன இருக்கின்றன என்பன போன்ற பொருளியல் புள்ளி விபரங்களை வாரிசுதார்கள் கணக்கெடுக்க ஆரம்பித்து விடுவார்கள்.

அவர்களில் சரியான வாரிசுதாரர்கள் யார் யார் , யார் யாருக்கு எந்தெந்த விகிதாச்சாரத்தில் பாகங்கள் கொடுக்கப்பட வேண்டும் என்ற சட்ட விதிமுறைகளை அடுத்து வரும் திருமறை வசனங்கள் தெளிவாக விளக்கிக் காட்டுகின்றன.

பாகபிரிவினையில் உங்களுடைய  மக்களின் விஷயத்தில் ஒரு ஆணுக்கு இரு பெண்களின் பங்கை போன்றது உண்டு என்று அல்லாஹ்  உங்களுக்கு கட்டளை இடுகிறான் அவர்கள் இரு  பெண்களாக [அல்லது] இரண்டுக்கு -மேல்பட்ட  பெண்களாக இருந்தால் [இறந்த] அவர் விட்டுச் சென்ற [சொத்] திலிருந்து மூன்றில் இரண்டு [பாகம்] அவர்களுக்கு உண்டு, ஒருத்தியாக அவள் இருந்தால், அவளுக்கு பாதி சொத்து உண்டு, [இறந்து விட்ட] அவருக்கு குழந்தை இருந்தால் [இறந்தவராகிய] அவருடைய பெற்றோருக்கு அவ்விருவரிலிருந்து ஒவ்வொருவருக்கும் அவர் விட்டுச் சென்ற [சொத்] திலிருந்து ஆறிலொன்று உண்டு. அவருக்கு குழந்தை இல்லையென்றால், அவருடைய பெற்றோர்  அவருக் வாரிசுக்காரர்களானால் , அப்போது அவருடைய தாய்க்கு மூன்றில் ஒன்று உண்டு  [மீதி இரண்டு பாகங்கள் தந்தைக்கு] அவருக்கு சகோதரர்கள் இருந்தால் அப்பொழுது [பெற்றோர் இருவரில்] அவருடைய தாய்க்கு ஆறிலொன்று தான் [கிடைக்கும் மீதி அனைத்தும் தந்தைக்கு கிடைக்கும் இந்த சட்டமாகிறது]  எதனை அவர் வசியத்து  செய்திருந்தாரோ அந்த வசியத்திற்க்கும் கடனுக்கும் [கொடுத்தது போக] உள்ளது ஆகும். [அல்குர் ஆன் ,4-11

உங்கள்  மனைவியர் விட்டுச் சென்றதில் அவர்களுக்கு குழந்தை இல்லையானால்- உங்களுக்கு பாதி [பாகம்] உண்டு, அவர்களுக்கு குழந்தை இருந்தால் அவர்கள் விட்டுச் சென்றதிலிருந்து எதனைக் கொண்டு அவர்கள்  வசியத் செய்தார்களோ, அந்த வசியதிற்கும் கடனுக்கும் [கொடுத்த] பிறகு' உங்களுக்கு நான்கில் ஒன்று உண்டு, உங்களுக்கு குழந்தை -இல்லாதிருப்பின்- நீங்கள் விட்டுச்சென்ற திலிருந்து [உங்களின் மனைவியராகி ] அவர்களுக்கு நான்கிலொன்று  உண்டு, உங்களுக்கு குழந்தை இருந்தால் நீங்கள் விட்டுச் சென்றதிலிருந்து  எதனைக்கொண்டு நீங்கள் வசியத் செய்தீர்களோ அந்த வசியத்துகும் கடனுக்கும் [கொடுத்த] பிறகு அவர்களுக்கு [மனைவியருக்கு[ எட்டில் ஒன்று உண்டு  , ஆனந்தரங்க்கொள்ளப்படுகின்ற இறந்து விட்ட ஒரு ஆண்  அல்லது ஒரு பெண் [தந்தை குழந்தை போன்ற] எந்த வாரிசும் இல்லாதவராக இருந்தால்  இன்னும் அவருக்கு [தாய் ஒன்றான] ஒரு சகோதரனோ அல்லது ஒரு சகோதரியோ இருந்தால் அவ்விருவரிலிருந்து ஒவ்வொருவருக்கும் ஆறிலொன்று உண்டு, [சகோதர சகோதரிகளாகிய] அவர்கள்  அதைவிட [ஒருவரைவிட] அதிகமாக இருந்தால் எதைக்கொண்டு வசியத்து  செய்யப்பட்டதோ அந்த வசியத்திற்கும், கடனுக்கும் [கொடுத்த] பிறகு [மீதியில்] மூன்றில் ஒன்றில் அவர் அனைவரும் கூட்டாளிகளாவார்கள் சமபங்குடையவர் களாவார்கள்  .
அல்குர் ஆன் ,4-12]

நபியே! ] உம்மிடம் [கலாலா பற்றி] அவர்கள் தீர்ப்பு கேட்கின்றனர்,, 'கலாலா' பற்றி அல்பாஹ் உங்களுக்கு [பின் வருமாறு]  தீர்ப்பளிக்கிறான் என்று கூறுவீராக,, எவரேனும் ஒரு மனிதர் இறந்து, அவருக்கு குழந்தை இல்லாமல் ஒரு சகோதரி [மட்டும்] அவருக்கு இருந்தால் அப்பொழுது அவளுக்கு அவர் விட்டுச் சென்ற  [சொத்]தில் பாதி உண்டு ,, [மாறாக ஒரு பெண் இறந்து ] அவளுக்கு  குழந்தை இல்லையானால் சகோதரனாகிய அவன் அவனு[டைய சொத்து முழுதுக் ] கும் வாரிசாவான், [சகோதரரிகலான ]அவர்கள் இரு பெண்களாக இருந்தால் அவன் விட்டுச்சென்ற [சொத்]திலிருந்து மூன்றில் இரண்டு [பாகம்] அவ்விருவருக்கும் உண்டு , ஆண்களும் பெண்களுமான உடன்  பிறந்தவர்களாக அவர்கள் இருந்தால் அப்பொழுது இரண்டு பெண்களின்  பங்கு போன்றது ஒரு ஆணுக்கு உண்டு.[அல்குர் ஆன், 4-177]

மேல் கூறப்பட்ட அந்த மூன்று இறை  வசனங்களே இஸ்லாமிய வாரிசுரிமை சட்டங்களுக்கு மூலாதாரமாகும். அவ்வசனங்களையும் நபி [ஸல்] அவர்களின் விளக்கங்களையும் அடிப்படையாக வைத்து அருமையான முறையில்  வடிவமைக்கப்பட்ட சட்டங்களே ஷரீ  அத்  கூறும் வாரிசுரிமை சட்டமாகும்.

திருமறையில் கூறப்பட்டுள்ள அச்சட்டங்களை வாசகர்கள்  இலேசாக  புரிந்து கொள்ளத்  தோதுவாக கேள்வி பதிலின் முறையில் தொகுத்து இன்ஷாஅல்லாஹ்  அடுத்த கட்டுரையில் தரப்படும் ........
இன்ஷாஅல்லாஹ்  இன்னும் விபரங்களும், விளக்கங்களும் தொடரும்..............
இன்ஷாஅல்லாஹ்  அடுத்த தலைப்பு .. பாகஸ்த்தர்களின் பட்டியல் என்ற தலைப்பில் பார்க்கவும்  .

No comments:

Post a Comment